பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்ட அமர்வில் கழுதை ... பரபரப்பு வீடியோ!
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் மேல்சபையான செனட் அமர்வு நடைபெற்று கொண்டிருந்த வேளையில், யாரும் எதிர்பாராத வகையில் ஒரு கழுதை திடீரென அரங்கிற்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விவாதங்கள் நடந்துகொண்டிருந்த நேரத்தில் அமைதியாக உள்ளே வந்த அந்த விலங்கைக் கண்டு சில விநாடிகள் உறுப்பினர்கள் திகைப்பில் உறைந்தனர். பின்னர் அரங்கமே சிரிப்பும், குழப்பமும் நிறைந்த சூழலாக மாறியது.
🚨⚡️ UNUSUAL:
— RussiaNews 🇷🇺 (@mog_russEN) December 5, 2025
"Thrilling Breach" by a Donkey in the Pakistani Parliament Hall Sparks Investigation! 🇵🇰🐴 pic.twitter.com/XaIMdihx2V
இதையடுத்து பாதுகாப்பு பணியாளர்கள் கழுதையை வெளியேற்ற முயன்றனர். ஆனால் திடீரென பதற்றமடைந்த அந்த கழுதை அரங்கிற்குள் ஓடியதால் சில எம்.பிக்களுடன் மோதியதாகவும் கூறப்படுகிறது. சில நிமிடங்களுக்குப் பின் அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வெளியே அழைத்துச் சென்றனர். இந்த அபூர்வ காட்சிகள் அனைத்தும் கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
இந்த சம்பவத்தை நகைச்சுவையுடன் எடுத்துக் கொண்ட செனட் தலைவர் யூசுப் ராசா கிலானி, “விலங்குகளுக்கும் நமது சட்டங்களில் இடம் வேண்டுமோ?” எனக் கூறியது அரங்கையே சிரிப்பில் ஆழ்த்தியது. இதற்கிடையே, கழுதை எவ்வாறு கடுமையான பாதுகாப்பு வலயத்தை தாண்டி நாடாளுமன்ற வளாகத்திற்குள் வந்தது என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக கூறப்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் மீம்களாகவும் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
