அடேங்கப்பா... ரூ 3,00,000/- கொடுத்து கழுதையை விலைக்கு வாங்கும் சீனா!
சீனாவில் 'எஜியோ' (Ejiao) தொழிலுக்காக கழுதை தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 'எஜியோ' என்பது பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒருவகையான ஜெலட்டின் ஆகும்.

இந்த ஜெலட்டின் கழுதையின் தோலை வேகவைத்து தயாரிக்கப்படும் இதன் மூலம் உடலில் ஏற்படும் சோர்வை போக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கட்டிகள் மற்றும் ரத்த சோகை போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரிய சீன மருத்துவ கடைகளில் இந்த ஜெலட்டின் பெரும் அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆச்சரியப்படும் வகையில் கழுதைகளை அறுப்பது முதல் தோல் உரிப்பது வரையிலான பெரும்பாலான வேலைகள் பாகிஸ்தானிலேயே நடக்கின்றன. இதற்காக பலுசிஸ்தானில் ஒரு பெரிய கழுதை வதைக்கூடம் கூட புதிதாக திறக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
