”ஹிந்திஇசை” ன்னு கூப்பிடாதீங்க… எனக்கு கெட்ட கோபம் வரும்… தமிழிசை ஆவேசம்!
தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கையை செயல்படுத்தினால் தான் கல்விக்கான 2000 கோடி நிதியை விடுவிக்க முடியும் என மத்திய அரசு செக் வைத்துள்ளது. தமிழ்நாட்டில் என்றென்றும் இரு மொழிக் கொள்கை மட்டும்தான் பின்பற்றப்படும் எனவும், ஒருபோதும் மும்மொழி கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் எனவும் தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

பாஜகவினர் மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இதற்கு ஆதரவாக பாஜக கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இந்திக்கு ஆதரவு கொடுப்பதால் அவரை இந்தி இசை என்று விமர்சனம் செய்து வருகின்றனர். இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழிசை சென்னையில் தொடர்ந்து கொலை நடக்கிறது. இது தலைநகரமா இல்ல கொலை நகரமா? தமிழ் தமிழ் என்று கூறுபவர்கள் தமிழ் மொழிக்காக என்ன செய்தார்கள். தமிழ் மொழி பாடத்தில் மட்டும் 40000 மாணவர்கள் தோல்வியடைந்ததாக கூறுகிறார்கள். நான் மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவு கொடுப்பதால் என்னை இந்தி இசை எனக் கூறி வருகின்றனர். இனிமேல் அப்படி என்னை கூப்பிட்டால் எனக்கு கெட்ட கோபம் வரும். என்னை இந்தி இசை என எனை கூற வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
