வீட்டை விட்டு வெளியில் வராதீங்க... 3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்!

தமிழகத்தில் இப்போதே வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. இந்நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மார்ச் 6ல் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். மார்ச் 10, 11, 12 தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி. மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
மார்ச் 10 வரை அடுத்த 4 நாள்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை நிலவக் கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக ஓரிரு இடங்களில் 2 - 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதற்கடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி காணப்படும்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!