தந்தூரிக்கு தடை… மாநில அரசு அதிரடி உத்தரவு... !
டெல்லியில் காற்று மாசு அபாயகரமாக உயர்ந்து வருவதால், மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, உணவகங்களில் நிலக்கரி மற்றும் விறகுகளைப் பயன்படுத்தும் தந்தூரி அடுப்புகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி முழுவதும் உள்ள ஹோட்டல்கள், தாபாக்கள் மற்றும் தெருவோர கடைகளில் இனி நிலக்கரி அல்லது விறகு மூலம் தந்தூரி உணவுகள் தயாரிக்க முடியாது.
இதற்குப் பதிலாக மின்சாரம் அல்லது எரிவாயு அடுப்புகளை பயன்படுத்துமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. திறந்த வெளியில் எந்தவிதமான எரிப்பும் செய்யக்கூடாது என்றும் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் பொறியாளர்கள் தங்கள் பகுதிகளில் தீவிர சோதனை நடத்த வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் ரேகா குப்தா, குப்பை எரிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மக்களின் சிறிய ஒத்துழைப்பே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தடை உத்தரவு, டெல்லி உணவக உரிமையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
