கோடை வியர்க்குருவிலிருந்து தப்பிக்க இத எல்லாம் செய்யாதீங்க.!

 
வியர்க்குரு
 

கோடை  வெயில் கொளுத்த தொடங்கி விட்டது. சரும பிரச்சனைகள், அஜீரண பிரச்சனைகள் என ஆரம்பித்து அதிமுக்கிய பிரச்சனையாக வந்து நம்மை மிரட்டுவது வியர்க்குரு தான். ஒரு சிலருக்கு உடல் முழுவதும் வியர்க்குரு வந்து பாடாய் படுத்தி விடும். கழுத்து, கை, கால்கள் தொடங்கி அந்தரங்க உறுப்புக்கள் வரை தீவிரமாகி விடும். இதனால் பலரும்கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சிலர் கிலோ கணக்கில் டால்கம் பவுடரை கொட்டி வியர்க்குருவில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கின்றனர். டால்கம் பவுடரால் நிரந்தர தீர்வு கிடையாது.  வியர்க்குரு அதிகரித்ததும் அரிப்பும் தொடங்கிவிடும். என்ன செய்வதென தெரியாமல் பலரும் விழி பிதுங்கி நிற்கின்றனர்.  இவர்களுக்கான அருமையான தீர்வாக மருத்துவ வல்லுனர்கள் என்ன சொல்கின்றனர் என்பதை இந்தப் பதிவில் காண்போம். 

வியர்க்குரு
வியர்க்குருக்கான காரணத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். கோடை வெப்பத்தின் காரணமாக, உருவாகும் அதிகப்படியான வியர்வை சருமத்தில் இருந்து சரியாக வெளியேற முடியவில்லை எனில் அது  வியர்க்குருவாக  வெளிப்படுகிறது. ஆரம்பத்தில் சின்னச் சின்னதாகப் பொரிப்பொரியாகத் தோன்றி, பிறகு அதில் அரிப்பு, எரிச்சல் உருவாகிவிடும்.  குழந்தைகள் சிலருக்கு காய்ச்சலும் வரலாம். குழந்தைகளின் சருமம் மென்மையானவை என்பதால்  சருமத் துவாரங்கள் மிக நுண்ணியதாக இருக்கும். அதனால் வியர்வை வெளியேற முடியாமல் வியர்க்குருவாக மாறிவிடும்.  குறிப்பாக அக்குள், இடுப்பு, முதுகு பகுதிகளில்  அதிகம் வருவதைப் பார்க்கலாம்.

தொலைக்காட்சிகள், பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்படும் டால்கம் பவுடர்களில் நிறைய மென்த்தால், கற்பூரம் இருப்பதாகச் சொல்லி கவர்ச்சிகரமான வாசகங்களால்  கவர்ந்திழுப்பர்.  அதைத் தடவும்போது குளுகுளுவென உணரச் செய்வதால் இதமாக இருக்கும். ஆனால், அந்த பவுடரே சருமத் துவாரங்களை அடைத்துவிடுவதால் வியர்க்குரு இன்னும் அதிகமாகுமே தவிர குறையாது என்பதை உணர வேண்டும். சில தினசரி நடைமுறைகளால் 10 நாட்களில் முழுவதுமாக வியர்க்குருவில் இருந்து விடுபடலாம். 

 வெயில் காலத்தில் இருமுறை குளிக்க வேண்டும். ஒரு பக்கெட் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் ஆப்பசோடா சேர்த்து குளிக்க வேண்டும்.  சோப்பை நேரடியாக சருமத்தில் வைத்துத் தேய்க்காமல் மென்மையான டவலை நீரில் நனைத்து, சோப்பில் தொட்டு, அதை வைத்தே சருமத்தைத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.  குளித்து முடித்ததும் லேசாக ஒற்றி எடுக்க வேண்டும். அழுத்தி தேய்க்கக் கூடாது.  காட்டன் உள்ளாடைகள் மற்றும் உடைகளை மட்டுமே அணிய வேண்டும்.  அரிப்பு அதிகமாக இருந்தால் ஐஸ்தண்ணீரில் நனைத்த துணியால் லேசாக ஒற்றி எடுக்கலாம். க்ரீமோ, லோஷனோ தேவையில்லை.  

வியர்க்குரு
இன்னும் அரிப்பு மிக அதிகமாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற்று சில மாத்திரைகளை  எடுத்துக் கொள்ளலாம். தொடர்ந்து இதை செய்தாலே வியர்க்குரு தானாகச் சரியாகிவிடும். வியர்க்குரு வந்து விட்டால் அதைத் தேய்ப்பதோ, சொரிவதோ கூடாது.  சிலர் வியர்வை மற்றும் வியர்க்குருவிலிருந்து தப்பிக்க உடல் முழுவதும் டால்கம் பவுடர் தடவிக் கொள்வது மிகப்பெரிய தவறு.  டால்கம் பவுடரில் உள்ள சிலிக்கானை குழந்தைகள் சுவாசித்தால் நுரையீரலுக்குள் போய் ஒவ்வாமையை ஏற்படுத்தி விடும்.  வீஸிங், மூச்சுத்திணறல்  பாதிப்புகள் வரலாம். அதே போல் அந்தரங்க உறுப்பில் பவுடர் போடுவதையும் தவிர்க்க வேண்டும். இதனால் சினைப்பை புற்றுநோயைக்கூட ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web