"என் மகனை வெச்சு அரசியல் பண்ணாதீங்க!" - பாஜகவினர் காலில் விழுந்து கதறிய பூர்ண சந்திரனின் தாய்!

 
பூர்ண சந்திரன் திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, மதுரை தல்லாகுளம் பகுதியில் தீக்குளித்து உயிரிழந்த இளைஞர் பூர்ண சந்திரனின் மரணம், மதுரையில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞரின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு திரண்ட பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகமே போர்க்களம் போலக் காட்சியளித்ததோடு, சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டனர்.

திருப்பரங்குன்றம்

நேற்று காலை பூர்ண சந்திரனின் உடற்கூறு ஆய்வு முடிவடைந்த நிலையில், அவரது உடலைப் பெற்றோரிடம் ஒப்படைக்கப் போலீசார் முயன்றனர். ஆனால், அங்கு திரண்டிருந்த பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர், பூர்ண சந்திரனின் தியாகத்திற்கு நீதி வேண்டும் என்றும், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி உடலை வாங்க விடாமல் தடுத்தனர். மேலும், அங்கு ஒட்டப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களைப் போலீசார் கிழித்ததாகக் கூறி, மருத்துவமனை நுழைவாயிலில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். ஒரு தரப்பினர் வாயில் கருப்புத் துணி கட்டி அமைதிப் போராட்டத்தில் ஈடுபட, மற்றொரு தரப்பினர் ஆவேசமாக முழக்கமிட்டதால் அங்கு பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியது.

நிலைமை கைமீறிச் செல்வதைக் கண்ட பூர்ண சந்திரனின் தாய் மற்றும் உறவினர்கள், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கட்சியினரின் காலில் விழுந்து கதறி அழுதனர். "அரசு எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளது, நாங்கள் என் மகனின் உடலைப் பெற்றுக்கொள்ளச் சம்மதித்து விட்டோம். தயவு செய்து என் மகனின் உடலை வைத்து அரசியல் செய்யாதீர்கள். அவனை அமைதியாக அடக்கம் செய்ய விடுங்கள், இங்கிருந்து கிளம்புங்கள்" என்று அவர் கண்ணீர் மல்கக் கெஞ்சிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்பவர் நெஞ்சைப் பிழிவதாக அமைந்தது.

திருப்பரங்குன்றம்

பெற்றோரின் இந்த உருக்கமான வேண்டுகோளைத் தொடர்ந்து, வேறு வழியின்றி பாஜக மற்றும் இந்து அமைப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு இடையே பூர்ண சந்திரனின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு கோரிக்கைக்காகத் தீக்குளித்து உயிர்நீத்த இளைஞரின் மரணம், அரசியல் காரணங்களுக்காக அவரது குடும்பத்தினருக்கே மன உளைச்சலை ஏற்படுத்திய விதம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!