குளிர் காலத்தில் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க...!

 
குளிர்

மழையை ரசிப்பவர்கள் கூட பெரும்பாலானோர் குளிரை ரசிப்பதில்லை. உடல் ஆரோக்கியம் தான் இந்த காலகட்டத்தில் பெரும் சவால்.  அதிலும் ஆஸ்துமா, சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள், சின்னஞ்சிறு குழந்தைகளை வைத்திருப்பவர்கள், வயதானவர்களை வீடுகளில் வைத்திருப்பவர்கள் பாடு பெரும் திண்டாட்டம் தான். பொதுவாகவே மழை மற்றும் குளிர் காலங்களில் சுற்றுப்புறச்சூழலின் வெப்பம் குறைவாக இருக்கும்.

மழைக்காலங்களில் குடிநீர் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.குடிநீர் மூலம் தான் நோய்கள் பரவும் வாய்ப்பு அதிகம். கொதிக்கவைத்து குடிப்பது சிறப்பு. இந்த காலத்தில் கிடைக்கும் அனைத்து காய்கறிகள் , பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். நார்ச்சத்து நிறைந்தவை கூடுதல் நன்மை பயக்கும். அதே நேரத்தில் ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் நீர்க்காய்கறிகளை தவிர்ப்பது உத்தமம். 

குளிர்

இதனால் உடலில் செரிமான சக்தி குறைவாக இருக்கும். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம்.குறிப்பாக உடல் வெப்பத்தை தக்க வைக்கும் உணவுகளை உண்ணுதல் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.மழைக்காலங்களில் கடல் உணவுகளை  தவிர்க்க வேண்டும் ஏனெனில் மழைக்காலங்களில் தினசரி மீனவர்கள்  கடலுக்கு செல்ல மாட்டார்கள். இதனால் பழையதான கடல் உணவுகள் தான் ரசாயனம் கலந்து பதப்படுத்தி விற்பனை செய்வர். 


பாட்டிலில் அடைக்கப்பட்டிருக்கும்  பானங்களில் கலந்திருக்கும்  செயற்கை சர்க்கரை செரிமான பிரச்சனைகளை உருவாக்கிவிடும்.  இதனால் வாயுத்தொல்லை, அமிலத்தன்மை, மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் உருவாகலாம். தயிர் நன்மை பயக்கும் என்ற போதிலும், மழைக்காலங்களில் அவைகளை கொழுப்பு நீக்கி நீர்மோராக்கி சாப்பிடலாம்.  அதற்கு பதிலாக பாலில் மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சூடாக குடிக்கலாம். 


குளிர்காலங்களில் அடிக்கடி சளி, இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்படலாம். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் நோய் தாக்கப்படலாம். பொதுவாகவே குளிர்காலத்தில் தொண்டைகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு 2-3 பூண்டு பற்களை மென்று தின்பதால் நல்லபலன் காணலாம்.

இருமல்
அத்துடன் உணவில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்து கொள்வதால் செரிமான சுரப்பிகள் சீராக இயங்கும். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிப்பதை அனுபவபூர்வமாக உணரலாம்.தினமும் கைப்பிடி அளவு வேர்க்கடலையுடன் சிறிது வெல்லம் சேர்த்து சாப்பிடலாம்.காரம், கசப்பு, துவர்ப்பு சுவை உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ளலாம்.பசும்பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் ஆரம்பத்திலேயே இருமல், சளி, ஜலதோஷத்தை தவிர்க்கலாம்.



நீர்ச்சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், வெள்ளரி வகை காய்கறிகளை குறைவாக சாப்பிடுவது நன்மை பயக்கும்.இனிப்புக்கள், எண்ணெயில் பொரித்த உணவுகளை அளவாக சாப்பிடலாம் .இரவில் பச்சைப் பயிறு, கேழ்வரகு உணவுகளை தவிர்க்கலாம்.சிட்ரிக் வகை பழங்கள் எலுமிச்சை , ஆரஞ்சை தவிர்க்க வேண்டும்.கீரை வகைகளை இரவில் தவிர்ப்பது நல்லது.ஆஸ்துமா, சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் பால், தயிர், வெண்ணெய் மற்றும் நெய் போன்ற பால்பொருட்களை குறைவாக சேர்த்து கொள்ள வேண்டும்

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web