மறந்துடாதீங்க... நாளையுடன் நிறைவு... வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இறுதி வாய்ப்பு!
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் போன்ற பணிகளுக்காக இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய கால அவகாசம் முடிய இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளது.
வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில் இறந்தவர்கள் (26.9 லட்சம்), இடம் பெயர்ந்தவர்கள் (66.4 லட்சம்) மற்றும் இரட்டைப் பதிவு உள்ளவர்கள் (3.9 லட்சம்) அடங்குவர். நீக்கப்பட்ட 66 லட்சம் பேரில், இதுவரை வெறும் 12,80,668 பேர் மட்டுமே மீண்டும் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். அதாவது, சுமார் 53 லட்சம் பேர் இன்னும் விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இருப்பினும், தேர்தல் ஆணையத்திடம் இருந்து இதுவரை நீட்டிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.

voters.eci.gov.in என்ற இணையதளம் அல்லது 'Voter Helpline' செயலி மூலம் வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம். நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால், வாக்குச்சாவடி மையங்கள் அல்லது வட்டாட்சியர் அலுவலகங்களில் படிவங்களைச் சமர்ப்பிக்கலாம். 18 வயது பூர்த்தியானதற்கான வயதுச் சான்று (ஆதார்/பிறப்புச் சான்றிதழ்) மற்றும் இருப்பிடச் சான்று அவசியம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
