மறக்காதீங்க... இன்னும் 12 நாட்கள் மட்டுமே! மார்ச் 31க்குள் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

 
சொத்து வரி

மறந்துடாதீங்க.. நடப்பு 2022-23 ஆம் ஆண்டு நிதியாண்டு முடிவதற்கு இன்னும் 12 நாட்களே மீதம் உள்ள நிலையில், இந்தக் காலகட்டத்தில் சில அடிப்படையான விஷயங்களைச் செய்ய வேண்டும்.
நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டுக்கான 'அட்வான்ஸ் டாக்ஸ்' எனப்படும், வருமான வரி செலுத்த மார்ச் 15 கடைசி நாளாகும்.  தவறியவர்கள் மார்ச் 31 வரை வரியை செலுத்தலாம். கடைசி நேர பரபரப்பைத் தவிர்க்க இப்போதே வேண்டிய ஆவணங்களை எடுத்து வைத்து வரி செலுத்த தயாராகுங்க. 

பான், ஆதார் இணைப்புக்கு மார்ச் 31 கடைசி நாள் என்ற நிலையில்,  அனைவரும் தங்கள் பான் கார்டு, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதனை ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.  இணைக்கப்படாத பான் கார்டுகள் ஏப்ரல் 1 முதல் செயல் இழக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் உங்கள் பான் எண் இல்லாமல் எந்த பண பரிவர்த்தனைகளையும் செய்ய இயலாது. இப்போதே சரி பார்த்துக் கொண்டால், வீண் அலைச்சல்களைத் தவிர்க்கலாம்.

ஆதார் பான்

நிறுவனங்கள் டிடிஎஸ் / டிசிஎஸ் பிடித்தங்கள் தொடர்பான கணக்குகளை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.  சொந்த வீட்டில் வரிப்பவர்களுக்கு சொத்து வரி செலுத்துவதற்கும், தண்ணீர் வரி செலுத்துவதற்கும் மார்ச் 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி தேதிக்குள் செலுத்தவில்லை எனில் அபராதம் விதிக்கப்படும். செலுத்தாத தொகைக்கு வட்டியும் விதிக்கப்படும். சில மாநகராட்சிகளில் சொத்து வரி செலுத்தவில்லையெனில், வணிக நிறுவனங்களை ஜப்தி செய்யும் நடவடிக்கைகளிலும் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

வியாபாரிகள், ஜிஎஸ்டி பதிவு பெற்றவர்கள் அனைவரும் தங்கள் வியாபரம் நிமித்தமான சரக்கு இருப்புகளை சரிகட்டி, சரிபார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் ஸ்டாக் கணக்குகளை இப்போதே சரிபார்க்க துவங்கிவிடுங்க. கடைசி நேரத்தில் தேதி நீட்டிக்கப்படாமல் போனால், அபராதமும் விதிக்கப்படலாம்.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி கணக்குகளில் ஏதாவது விடுதல், சரிகட்டுதல்கள் இருக்குமானால், அமென்ட்மென்ட் போட்டு, திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.  குறிப்பாக, 6 மாத அளவிலான கணக்குகளில் இந்த மாதிரியான திருத்தங்கள் செய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

2021-22ம் நிதியாண்டுக்கான விடுபட்ட வருமான வரிக் கணக்குப் படிவங்களை, அப்டேட்டட் ரிட்டனாக தாக்கல் செய்ய, இம்மாதம் மார்ச் 31 கடைசி நாளாகும். அதனால் இந்த லிஸ்ட்ல நீங்க எந்த கேட்டகரியில் வருகிறீர்கள் என்பதனைப் பார்த்து, உடனே இந்த முக்கிய வேலைகளை முடிச்சிடுங்க. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web