கல்யாணம் பண்ணி தரலை... இளம்பெண்ணைத் துண்டு, துண்டாக வெட்டிக் கொன்ற இளைஞர்! கதறியழுத அண்ணன்!

 
ஷரத்தா

ஜம்மு காஷ்மீரில் தச்சு வேலைச் செய்து வரும் ஷபீர் என்பவருக்கு அந்த பகுதியில் வசித்து வந்த இளம்பெண் மீது காதல் எழுந்துள்ளது. இளம்பெண்ணிடம் தன்னுடைய காதலைத் தெரிவித்த நிலையில், தன்னுடைய குடும்பத்தாரின் விருப்பப்படி தான் என்னுடைய திருமணம் நடைப்பெறும் என்று இளம்பெண் மறுத்திருக்கிறார். அப்படியும் இளம்பெண் மீது தீராத காதல் இருந்த நிலையில், அவள் வீட்டிற்கு பெண் கேட்டு சென்றுள்ளார் ஷபீர்.

இளம்பெண்ணின் தாயும், அண்ணனும், ஷபீர் தச்சு வேலைச் செய்து பிழைத்து வந்ததால், இந்த காதலுக்கும், திருமணத்திற்கும் சம்மதம் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இதனால், தனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்க கூடாது என்கிற மனநிலையில், கோச்சிங் வகுப்புக்குச் சென்ற இளம்பெண்ணை துண்டு துண்டாக வெட்டிக் கொலைச் செய்துள்ளான் ஷபீர்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் புட்காம் மாவட்டத்தில் உள்ள சோய்பக் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் இம்மாதம் 7ம் தேதி முதல் காணவில்லை. இதைத் தொடர்ந்து போலீசில் அந்த பெண்ணின் சகோதரர் தன்வீக் அகமது கான் புகார் அளித்துள்ளார். தனது 30 வயது சகோதரி கோச்சிங் வகுப்புக்கு சென்று வீடு திரும்பவில்லை என அவர் புகார் கூறிய நிலையில், போலீசார் தேடத் தொடங்கியுள்ளனர்.

murder

அந்த பெண்ணுக்கு அறிமுகமானவரான ஷபீர் அகமது வானி (45) என்ற நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்துள்ளனர். பெண் கடைசியாக பேசி தொலைபேசி அழைப்புகளை அடிப்படையாக கொண்டு ஷபீரை பிடித்துள்ளனர். அப்போது அவரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் பெண்ணை கொலை செய்து பல துண்டுகளாக வெட்டி வீசியதாக பகீர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

தச்சு வேலை செய்யும் ஷபீருக்கு மயாமான பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசை இருந்துள்ளது. பெண்ணின் உறவினர்களையும் பெண் கேட்டு அனுகியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவிக்கவே அது அவருக்கு ஆத்திரமாக மனதில் தங்கியுள்ளது. 

Police-arrest

இந்நிலையில், சம்பவ நாள் அன்று பெண்ணைக் கொலைச் செய்த ஷபீர், அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி ஓம்பூரா பகுதியில் உள்ள பல இடங்களில் வீசியுள்ளார். ஷபீரை கைது செய்து வாக்கு மூலத்தை பெற்ற போலீசார் இறந்த பெண்ணின் உடல் பாகங்களை மீட்டு வருகின்றனர்.  விரும்பிய பெண் கிடைக்கவில்லை எனில் எங்கிருந்தாலும் வாழ்க என கூறிய காலமெல்லாம் மலையேறி விட்டது. அவளை ரயிலில் தள்ளி விடு, விஷம் வைத்து கொல்லு, உடலின் பாகங்களை வெட்டி நாய்களுக்கு வீசு, கொலை செய், ஆசிட் ஊற்று என கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. வளரும் தலைமுறையினருக்கு பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ இது குறித்த புரிதல்களும், விழிப்புணர்வுகளும் ஏற்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை பொதுமக்களிடையே எழுந்துள்ளது. ஆண்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்று காதலிகளும் கேரளாவில் நிகழ்ந்ததைப் போல காதலனை விஷம் வைத்துக் கொன்று, வேறொருவனைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். அதிலும் டெல்லியில் ஷரத்தா வழக்கை தொடர்ந்து அதே போல் தொடர் சம்பவங்கள் நிகழ்ந்து வருவது இளம் பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web