Bad Girl படத்துக்கு சென்சார் தராதீங்க... வெடித்த சர்ச்சை!

 
bad girl


 
 
இயக்குனர் வெற்றிமாறன், அனுராஜ் ஹாசியப் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பேட் கேர்ள். இந்த திரைப்படத்தில் நடிகை அஞ்சலி, ரம்யா   நடிப்பில் உருவாகியுள்ள Bad Girl திரைப்படத்தின் டீசர்  ஜனவரி 26 ம் தேதி வெளியானது. இந்த டீசரில் பிராமண பெண் நாகரீக கலாச்சாரத்துக்கு மாறும் வகையிலும் , பிராமண பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி, இந்த காட்சிகளை நீக்கும் வரைபடத்திற்கு தணிக்கை சான்று வழங்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  

bad girl

கோவையை சேர்ந்த ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கத்தின் தலைவர் ராமநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், இந்த டீசரை வைத்து சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகளில் பிராமண இனத்தை தரம் தாழ்த்தி பேசப்பட்டு வருவதாகவும் பிராமாண மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்று இருப்பதாகவும்  குறிப்பிடப்பட்டிருந்தது.

உயர்நீதிமன்றம்


இந்த மனு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது . அப்போது, மனுதாரர் தரப்பில்,  குறிப்பிட்ட சமூகத்தையும், பெண்களையும் தவறாக சித்தரித்து காட்சிகள் அமைப்பது சட்டவிரோதமானது என்பதால் படத்திற்கு சென்சார் சான்று வழங்க கூடாது என வாதிடப்பட்டது. தணிக்கை குழு தரப்பில், bad girl என்ற பெயரில்  தணிக்கை சான்று வழங்க கேட்டு இது வரை எந்த விண்ணப்பமும் வரவில்லை.  இருந்தாலும் மனுதாரரின் மனுவினை சட்டப்படி பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.  .

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web