ஈரானுக்கு செல்ல வேண்டாம்… இந்தியர்களுக்கு எச்சரிக்கை!
ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை இந்தியர்கள் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அந்நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரானில் வசித்து வரும் இந்தியர்களும் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரான் செலாவணியான ரியால் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒரு அமெரிக்க டாலருக்கு 14 லட்சம் ரியால் வரை சரிந்ததை தொடர்ந்து, பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. 20க்கும் மேற்பட்ட மாகாணங்களில் நடந்த போராட்டங்களில் மோதல் ஏற்பட்டு 15 பேர் உயிரிழந்ததுடன், 500க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் ஈரானில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் போராட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தின் சமூக ஊடகங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறும் கூறப்பட்டுள்ளது. குடியிருப்பு விசாவில் உள்ள இந்தியர்கள் தூதரகத்தில் பதிவு செய்யாதிருந்தால் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
