சிரிக்காதீங்க... நிஜமாவே சொன்னாரு... காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க தயார்... கார்த்தி சிதம்பரம் பேட்டி!

 
கார்த்தி சிதம்பரம்

இந்திய காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்சி ஏற்பட வேண்டும் என்று ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொண்டார். உண்மையில், இந்தியா முழுவதுமான ராகுலின் நடைப்பயணம் மக்களிடையே ஓரளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுத்துள்ளது. ஆனால், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களின் எண்ணிக்கையை விட கோஷ்டிகள் அதிகம் இருப்பது காமராஜர் காலத்துக்கு பிறகு தொடர்ந்து வந்து கொண்டிருப்பது தானே.. என்றாலும் ராகுலின் நடைப்பயணத்திலும் அப்பட்டமாய் தெரிந்தது.

அப்பாவின் ஆசைக்காகவும், அவர் இடத்தை தார்மீகப் பொறுப்பேற்று நிரப்புவதற்காகவும் நடிகர் விஜய் வசந்த், நடிப்பையும், வியாபாரத்தையும் எல்லாம் ஓரமாய் ஒதுக்கி வைத்து விட்டு, கன்னியாகுமரி முழுவதும் ப்ளாட்பாரத்தில் படுத்துறங்கி, கட்சி பணி செய்து, கிடைத்ததை சாப்பிட்டு என்று கடந்த 25, 30 வருடங்களாக காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கே இல்லாத அல்லது தெரியாத கட்சிப் பணிகளை சுழன்று சுழன்று செய்தார். இந்த கட்சி பணி வேலைகளை எல்லாம் இப்போதைய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மறந்து போய் ரொம்ப வருஷங்களாகிறது. 

கார்த்தி சிதம்பரம்

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி கிடைத்தால், ஏற்க தயாராக இருக்கிறேன் என்று கார்த்தி சிதம்பரம் பேசி இருக்கிறார். அட சிரிக்காதீங்க.. .நிஜமாகவே அப்படி தான் பேசினாரு. 

புதுக்கோட்டை மாவட்டம் நச்சாந்துபட்டியில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பேசும் போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சித்தாந்த ரீதியாக அந்த கட்சியில் சேரவில்லை. நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்காததால், அண்ணாமலை பாஜவில் சேர்ந்தார். அதிமுக, பாஜக கூட்டணி தொடருமா என்பது தெரியவில்லை. தமிழகத்தில் பாஜவுடன் யார் கூட் டணி வைத்தாலும் அவர்கள் தேர்தலில் பின்னடைவை சந்திப்பார்கள். 

சசிகலா

பார்லிமென்டில் ராகுல் மன்னிப்பு கேட்க தேவையில்லை. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி அளித்தால் ஏற்க தயாராக உள்ளேன். சசிகலா தைரியமானவர் என்று ஏற்கனவே நான் கூறியிருந்தேன். அதை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். அவர் தைரியமாக அரசியலுக்கு வரவில்லை. அமலாக்கத்துறை என்பது எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்கே பயன்படுத்தப்பட்டு வருகிறது. என்று அடுக்கிக் கொண்டே போனாரு. அதற்கு மேல நாம அங்க இருந்தா நம்மளையும் ஏதாவது வில்லங்கமா பேச வெச்சுடுவாருன்னு அங்கிருந்து கிளம்பினோம். கிளம்பி வரும் போது, இவருக்கு ஓவர் ஆசை என கூட்டத்தில் இருந்த இன்னொரு நிருபரும் கூறி விட்டு கலைந்தார். அது சரி.. இந்த ஃபிலீங் நமக்கு மட்டும் கிடையாது போல.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web