இத அரசியலா பாக்காதீங்க... உரிமைய மீட்டெடுக்க அனைத்து கட்சி கூட்டத்துக்கு வாங்க... அரசியல் கட்சிகளுக்கு முதல்வர் மீண்டும் அழைப்பு !

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மறுநாள் மார்ச் 5, 2025 அன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்காக பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அதில் நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள்வோம்! சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்” என அழைத்திருந்தார். இதனை தொடர்ந்து பாஜக பங்கேற்காது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அவரை தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் பங்கேற்காது என ஜி.கே.வாசன் அறிவித்திருந்தார்.
அதே சமயம், அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதைப்போல, தேமுதிகவும் பங்கேற்கும் என அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வரமுடியாது என்று சொன்னவர்கள் தயவுகூர்ந்து வரவேண்டும் என மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாகையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் நிகழ்வில் ” தொகுதிகள் மறுசீரமைப்பு என்பதை கொண்டு வந்து தமிழ்நாட்டின் உரிமையை பறிக்க முயற்சி நடப்பது உங்களுக்கே தெரியும். எனவே, இதன் காரணமாக நாளை மறுநாள் புதன்கிழமை மார்ச் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்டியிருக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான கட்சிகள் வருவதாக செய்திகள் அனுப்பி இருக்கிறார்கள்.
அதைப்போல சில கட்சிகள் நாங்கள் வரமாட்டோம் எனக் கூறியிருக்கிறார்கள். இந்த நேரத்தில் அவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது ஒரு விஷயம் தான். இந்த கூட்டத்திற்கு வருவதற்கு கெளரவம் பார்க்காதீர்கள் இவன் என்ன அழைப்பது நாம் என்ன போவது என்று இருக்காதீர்கள். இது திமுகவுக்கோ அல்லது தனிப்பட்ட பிரச்சனையோ இல்லை. இது தமிழ்நாட்டுடைய பிரச்சனை எனவே, அதனை சிந்தித்து பார்த்து நீங்கள் அனைவரும் வரவேண்டும். இது தமிழ்நாட்டுடைய உரிமை…அரசியலாக பார்க்காதீர்கள்” எனக் கூறி மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!