மிஸ் பண்ணீடாதீங்க!! நாளை ரேஷன் கார்டு குறை தீர்க்கும் முகாம்!!

தமிழகம் முழுவதும் மானிய விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. அரசின் மற்ற சலுகைகளும் ரேஷன் கடைகள் மூலம் வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ரேஷன்அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் , மொபைல் எண் இணைத்தல் என பல்வேறு குறைபாடுகளை குறைதீர்க்கும் முகாம்கள் மூலம் சரி செய்யப்பட்டு வருகின்றன. இந்த குறை தீர்க்கும் முகாம்கள் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகின்றன.
இதன் மூலம் பொதுமக்கள் பயனடையலாம். அதே போல் மூத்த குடிமக்கள் , ரேஷன் கடைகளுக்கு நேரடியாக வந்து பொருள் வாங்க முடியாதவர்களுக்கான அங்கீகாரச் சான்று விண்ணப்பங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. சாதாரணமாக பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவின் அடிப்படையில் ரேஷன் கடையில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ரேஷன் பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு எவ்வித குறையும் இல்லாமல் சென்றடைய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் மக்கள் குறைகேட்பு முகாம் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மார்ச் மாதத்திற்கான குறை கேட்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம்கள் மண்டல உதவியாளர் அலுவலகங்களில் நாளை மார்ச் 11ம் தேதி , சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க