மிஸ் பண்ணாதீங்க... இன்று நள்ளிரவுடன் நிறைவு... CUET தேர்வுக்கான விண்ணப்பத் திருத்தம் மேற்கொள்ள இறுதிவாய்ப்பு!
மிஸ் பண்ணாதீங்க. இது இறுதி வாய்ப்பு. இன்று பிப்ரவரி 11, 2026 (புதன்கிழமை) இரவு 11:50 மணி வரை மட்டுமே தேசியத் தேர்வு முகமை (NTA) வழங்கியுள்ள திருத்தச் சாளரம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாளரத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது பெயர், தந்தை, தாயார் பெயர், 10வது மற்றும் 12ம் வகுப்பு தொடர்பான மதிப்பெண் விவரங்கள் மற்றும் பள்ளி விவரங்கள், பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படம் அல்லது கையொப்பம் தெளிவாக இல்லாவிட்டால் புதிய கையொப்பம் போன்றவற்றில் திருத்தங்களை செய்துக் கொள்ளலாம்.
விண்ணப்பித்த பாடங்கள் (Subjects), தேர்வு எழுத விரும்பும் நகரங்கள் (Exam City) மற்றும் பல்கலைக்கழக விருப்பங்களை என குறிப்பிட்ட விவரங்களில் மட்டுமே மாற்றங்களைச் செய்ய முடியும். பாதுகாப்பு காரணங்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, நிரந்தர மற்றும் தற்போதைய முகவரி ஆகிய விவரங்களை மாற்ற அனுமதி இல்லை:
மாணவர்கள் தங்களது பாடங்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் அல்லது இட ஒதுக்கீடு பிரிவை (Category) மாற்றினால், அதற்கேற்ப கூடுதல் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். இந்தக் கட்டணத்தையும் இன்று இரவு 11:50 மணிக்குள் ஆன்லைன் வாயிலாகச் செலுத்த வேண்டும்.

திருத்தம் செய்வது எப்படி?
cuet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
உங்கள் 'விண்ணப்ப எண்' (Application Number) மற்றும் 'கடவுச்சொல்' (Password) மூலம் லாகின் செய்யவும்.
'Correction in Application Form' என்ற இணைப்பைத் தேர்வு செய்து தேவையான மாற்றங்களைச் செய்யவும்.

அனைத்துத் திருத்தங்களையும் செய்த பிறகு, மீண்டும் ஒருமுறை சரிபார்த்து 'Submit' கொடுக்கவும்.
இறுதியாக மாற்றப்பட்ட விண்ணப்பப் படிவத்தை (Confirmation Page) டவுன்லோட் செய்து வைத்துக்கொள்ளவும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
