மிஸ் பண்ணாதீங்க... அக்னிவீர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஏப்.25 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கான தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வரும் ஏப்ரல் 25ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, கோவை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலர் கர்னல் அன்சூல் வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி, தருமபுரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப் பிக்கலாம். வரும் ஏப்ரல் 25ம் தேதி வரை www.joinindianarmy.nic.in ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அக்னிவீர் பொது பணியாளர், அக்னிவீர் தொழில் நுட்பம், அக்னிவீர் எழுத்தர், கிடங்கு மேலாளர், அக்னிவீர் தொழிலாளி (10ம் வகுப்பு தேர்ச்சி), அக்னிவீர் தொழிலாளி (8ம் வகுப்பு தேர்ச்சி) ஆகிய பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இதில் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். 1.6 கி.மீ ஓட்டப் பரிசோதனைக்கான நேரம் 5 நிமிடம் 45 விநாடிகளிலிருந்து 6 நிமிடம் 15 விநாடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. என்சிசி, ஐடிஐ, டிப்ளோமா முடித்தவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். நுழைவுத்தேர்வு தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும். முதலில் ஆன்லைன் பொதுத் தேர்வு நடைபெறும்.
அதன் பின்னர் ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்படும். தேர்வு தேதிகள் விரைவில் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அறிவிக்கப்படும். இந்த ஆட்சேர்ப்பு முறையே முற்றிலும் வெளிப்படையானது மற்றும் திறமையை அடிப்படையாக கொண்டது. மோசடி செய்யும் ஏஜென்ட்டுகளிடம் ஏமாற வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!