மிஸ் பண்ணாதீங்க... இன்று தஞ்சாவூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

 
சிறப்பு முகாம்
இந்த வாய்ப்பைத் தவற விடாதீங்க. உங்க பகுதியிலேயே வேலை காத்திருக்கு. உங்கள் திறமைக்கும், கல்விக்கும் ஏற்ற வேலையைத் தேர்ந்தெடுங்க. பொதுவாகவே ஒவ்வொரு மாதமும் இளைஞர்களுக்காக தமிழகம் முழுவதும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் அலுவலக வளாகத்திலேயே காலை 10 மணி அளவில் நடத்தப்பட்டு வருகின்றன.

வேலை வாய்ப்பு முகாம்

இதன்படி இன்று பிப்ரவரி 21ம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில், 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு பயனடையலாம்.  வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

வேலை வாய்ப்பு

இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணிவாய்ப்பினை பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு  04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web