மிஸ் பண்ணாதீங்க... ரூ.20க்கு கீழ் வர்த்தகமாகும் இந்த ஷேர் உரிமை வெளியீட்டை அறிவித்துள்ளது!

 
தொழிற்சாலை பொறியியல் கட்டிடம்

இருபது ரூபாய்க்கும் கீழ் இருக்கும் இந்த ஷேர், உரிமை வெளியீட்டை அறிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை, இந்திய பங்குச்சந்தை குறியீடுகள்  உயர்வுடன் முடிவடைந்தன. பிற்பகல் 03:30 மணியளவில், பிஎஸ்இ சென்செக்ஸ் 0.0.6 சதவிகிதம் உயர்ந்து 60,431 என்ற அளவிலும், என்எஸ்இ நிஃப்டி 50 குறியீடு 0.088 சதவிகிதம் உயர்ந்து 17,828 என்ற அளவிலும் நிறைவு செய்தன.

ஜிஐ இன்ஜினியரிங் சொல்யூஷன்ஸ் லிமிடெட் பங்குகள் அதன் முந்தைய முடிவான ரூபாய் 17.87ல் இருந்து 5 சதவிகிதம் அப்பர் சர்க்யூட்டாகி  ரூபாய் 19.69 ஆக அதிகரித்தது. மேலும் பங்கு ஒன்றுக்கு ரூபாய் 19.69 என்ற புதிய 52 வார உச்சத்தில் வர்த்தகமானது.

தொழிற்சாலை பொறியியல் கட்டிடம் இன்ஜினியரிங்

GI இன்ஜினியரிங் இயக்குநர்கள் குழு 11 பங்குகளுக்கு 8 பங்குகள்  என்ற விகிதத்தில் பங்கு பங்குதாரர்களுக்கு உரிமை வெளியீட்டை அறிவித்துள்ளது. ஏப்ரல் 18, 2023 செவ்வாய்கிழமை, உரிமை வெளியீட்டிற்கான பதிவுத் தேதியை நிறுவனம் அறிவிள்ளது. வெளியீட்டுத்தேதி ஏப்ரல் 27, 2023 வியாழன் மற்றும் இறுதித்தேதியாக மே 9, 2023 அன்றுடன், ஒரு பங்கின் உரிமை வெளியீட்டு விலை ரூபாய் 10 ஆகும்.

தொழிற்சாலை பொறியியல் கட்டிடம் ஜி சர்வீஸ்

GI இன்ஜினியரிங் சொல்யூஷன்ஸ், லிமிடெட் என்பது ஒரு கடல்சார் பொறியியல் வடிவமைப்பு நிறுவனமாகும். நிறுவனம் சிவில் இன்ஜினியரிங் மற்றும் தகவல் தொழில்நுட்ப (IT) ஆதரவை வழங்குகிறது. நிறுவனத்தின் பங்குகள் பிஎஸ்இ-யில் 2 மடங்குக்கு மேல் அதிகரித்தன. நிறுவனம் சிறந்த காலாண்டு முடிவுகளை (Q3FY23) அறிவித்துள்ளது. நிறுவனம் ஏறக்குறைய கடனற்றது மற்றும் நிறுவனர்களின் பங்குகள் Q3FY23ல் Q3FY22 ஐ விட 1.11 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இப்பங்கு ஒரே மாதத்தில் 151.15 சதவிகித மல்டிபேக்கர் வருமானத்தை அளித்துள்ளது, அதேசமயம் பிஎஸ்இ ஸ்மால்-கேப் இன்டெக்ஸ் வெறும் 3 சதவிகிதம் மட்டுமே உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்கள் தங்கள் கண்காணிப்புப்பட்டியலில் இந்த சிவில் கட்டுமான நிறுவனத்தின் பங்குகளை வைக்க வேண்டும் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web