பெயர் சேர்க்க, திருத்த மிஸ் பண்ணாதீங்க... இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்!
இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த, விலாசம் மாற்ற இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாமல் பயன்படுத்திக்கோங்க.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள சென்னை மாநகராட்சியின் அறிவிப்பின்படி, மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 19ம் தேதி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 19 முதல் ஜனவரி 18 வரை ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறப்பட்டு வருகிறது. இதற்காக ஏற்கனவே பல தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், மீண்டும் இன்றும், நாளையும் ஜனவரி 10 மற்றும் 11ம் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முகாம் நடைபெற உள்ளது. பெயர் சேர்க்க படிவம்-6, பெயர் நீக்க அல்லது ஆட்சேபனைக்கு படிவம்-7, திருத்தம் மற்றும் முகவரி மாற்றத்திற்கு படிவம்-8 பயன்படுத்தலாம். தகுதியுள்ள குடிமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
