இன்று மிஸ் பண்ணிடாதீங்க... சென்னையில் 12-வது கட்ட "நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாம்!

 
நலம் காக்கும் ஸ்டாலின்

சென்னை: தமிழக முதல்வரின் சீரிய திட்டமான "நலம் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு மருத்துவ முகாம், இன்று (டிசம்பர் 27, 2025) சென்னையில் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தை இலவசமாகப் பரிசோதித்துக் கொள்ள இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

இடம்: அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், கண்ணகி நகர், சோழிங்கநல்லூர் மண்டலம், சென்னை.

தேதி: 27.12.2025 (இன்று - சனிக்கிழமை)

நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை.

நலன் காக்கும்

இந்த பிரம்மாண்ட மருத்துவ முகாமில் பின்வரும் 17 வகையான மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன:பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை, இதயம் மற்றும் நரம்பியல் பரிசோதனை, எலும்பியல் மற்றும் தோல் மருத்துவம், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன், கண், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை, பல் மற்றும் மனநல மருத்துவம், நுரையீரல் மற்றும் சர்க்கரை நோய் மருத்துவம், ஸ்கேன் மற்றும் முழு உடல் பரிசோதனை. மேலும், ஆரம்பக்காலப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, காசநோய் மற்றும் தொழுநோய் சோதனைகளும் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.

மருத்துவச் சிகிச்சைகள் மட்டுமின்றி, அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கான பதிவுகளும் இங்கு நடைபெறுகின்றன. முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம்: புதிய காப்பீட்டு அட்டைகளுக்குப் பதிவு செய்தல். மாற்றுத்திறனாளிகள் நலன்: அரசு அங்கீகாரச் சான்றிதழ் பெறுதல். தொழிலாளர் நல வாரியம்: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல். ஊட்டச்சத்து விழிப்புணர்வு: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஆலோசனை.

மருத்துவ முகாம்

கடந்த ஆகஸ்ட் 2, 2025 அன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 11 கட்டங்களாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் இதுவரை 26,893 நபர்கள் பயனடைந்துள்ள நிலையில், இன்று 12-வது கட்ட முகாம் சோழிங்கநல்லூர் பகுதியில் நடைபெறுகிறது.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், குறிப்பாகக் கண்ணகி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியினர், இன்று நடைபெறும் இந்த இலவச மருத்துவ முகாமில் பங்கேற்றுப் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!