பதற்றம் வேண்டாம்... போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது…. இந்தியன் ஆயில் நிறுவனம் வேண்டுகோள்!

 
பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்  இந்தியா ஆபரேஷன் சிந்தூர்  தாக்குதலை நடத்தி பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து அழித்தது. நேற்று இரவு முதல் பாகிஸ்தான் படையினர் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இன்று (டிசம்பர் 08) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

போர் பதற்றம் காரணமாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் பெட்ரோல் நிலையங்களில் குவிந்து அதிக அளவு பெட்ரோல், டீசல் வாங்கி வருகின்றனர்.  இந்தியன் ஆயில் நிறுவனம் தேவையான பெட்ரோல் டீசல் கையிருப்பில் உள்ளது. மக்கள் பயப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளது.

பெட்ரோல் டீசல்

இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில்  இந்தியன் ஆயில் நாடு முழுவதும் போதுமான எரிபொருட்களை இருப்பு வைத்துள்ளது. எங்கள் விநியோக வழிதடங்கள் சீராக இயங்குகிறது. மக்கள் அச்சப்பட தேவை இல்லை. எரிபொருள் மற்றும் எல்பிஜி எங்கள் அனைத்து விற்பனை நிலையங்களிலும் உடனடியாக கிடைத்துள்ளது.  மக்கள் அவசரப்படாமல் அமைதியாக இருக்கும்படி இந்தியன் ஆயில் நிறுவனம் கேட்டுக் கொண்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?