“அம்மாகிட்ட சொல்லாதே...” ஜனவரியில் கல்யாணம்... 9வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!
கல்யாணத்துக்கு இன்னும் முழுசா ரெண்டு மாசம் கூட கிடையாது. வரும் ஜனவரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தில், 28 வயது பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் ராதிகா கோடடியா, 9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த போலீசார் விசாரணையில், ராதிகா மற்றும் அவரின் வருங்கால கணவர் இடையே சமீபகாலமாக சண்டைகள் ஏற்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. போலீசார், ராதிகாவின் காதலரின் செல்போனை ஆய்வு செய்து, பரிசோதித்து பார்த்தபோது, ராதிகாவில்லி அவரது வருங்கால கணவர் அனுப்பியிருந்த ஒரு வாட்ஸ்அப் செய்தி போலீசார் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், “சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் உங்கள் பெற்றோரிடம் சொல்ல வேண்டாம்…” என்று குறிப்பிட்டிருந்தது.இந்த மெசேஜ், இருவருக்கும் இடையே உறவு பதட்டம் நிலவியிருக்கலாம் என்பதைக் காட்டுவதாக விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.
தற்கொலை நடந்த நாளில் ராதிகா இருந்த கஃபே ஊழியர்களிடமும், அவரது குடும்பத்தினர் மற்றும் வருங்கால கணவரிடமும் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர். மேலும் ராதிகாவின் மொபைல் உரையாடல்கள் மற்றும் அழைப்புப் பதிவுகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

திருமணத்திற்கு சில மாதங்கள் மட்டுமே இருந்த நிலையில் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம், ராதிகாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை பெரும் உலுக்கியுள்ளது. போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
