வயசாகிடுச்சுன்னு நினைக்காதீங்க… 13 நாடுகளில் அடுத்தடுத்து ஆட்டம் தான்... இளையராஜா நெகிழ்ச்சி!

இசைஞானி இளையராஜா லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி சாதனை படைத்துள்ளார். இன்று சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் பெரும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது இன்று சென்னை திரும்பி உள்ளார். சிம்பொனி இசைத்து விட்டு சென்னை வந்த இளையராஜாவுக்கு, தமிழக அரசின் சார்பில், அமைச்சர் தங்கம் தென்னரசு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்துள்ளார்.
சிம்பொனி நிகழ்ச்சியை முடித்து சென்னை திரும்பிய இளையராஜா , “லண்டனைத் தொடர்ந்து ஜெர்மனி, பிரான்ஸ், துபாய் உட்பட 13 நாடுகளில் சிம்பொனியை அரங்கேற்ற உள்ளேன். லண்டனில் இசை கோர்ப்பாளர் நிகில் டாம்ஸ் சிறப்பாக நிகழ்ச்சியை அமைத்துக் கொடுத்தார். இந்நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு மொமண்ட்டிற்கும் கைதட்டி ரசிகர்கள் கொண்டாடியிருப்பதாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அனைவரும் மனமார வாழ்த்தியதால் தான், நிகழ்ச்சி பெரிய வெற்றி பெற்றது எனவும், அரசின் சார்பாக வரவேற்றது மகிழ்ச்சி எனவும் கூறினார். இந்நிகழ்ச்சியை 13 நாடுகளில் நடத்த தேதி குறிச்சாச்சு எனக் கூறி அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளர். 82 வயசாகிடுச்சே இனிமே என்ன பண்ணப்போகிறார் என நினைத்து விடாதீர்கள். இது ஆரம்பம்தான். என்னை இசைக்கடவுள் என்றெல்லாம் ரசிகர்கள் சொல்வதை கேட்கும்போது, ‘இளையராஜா அளவுக்கு கடவுளை கீழே இறக்கிட்டீங்களேப் பா’ என்று தான் எனக்குத் தோன்றும். நான் சாதாரண மனிதனைப் போலத்தான் வேலை செய்கிறேன், என்னைப் பற்றி எனக்கு ஒரு எண்ணமும் கிடையாது.
சிம்பொனியை யாரும் டவுன்லோட் செய்து கேட்காதீர்கள், அதனை நேரில் உணர வேண்டும். நம்மண்ணிலும் நடக்கும் அதுவரை காத்திருக்கவும். சிம்பொனி நிகழ்ச்சியை யாரும் டவுன்லோடு செய்து கேட்காதீர்கள். காரணம், நீங்கள் அதை நேரில் உணரும் போது அதன் அனுபவம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். நம் நாட்டிலும் நிகழ்ச்சி நடைபெறும், மக்கள் அதுவரை காத்திருங்கள்” என்றார்.
இதில் இளையராஜாவை வரவேற்று பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “நம் அனைவரின் பெருமைமிக்க அடையாளம் இசைஞானி இளையராஜா. தனது இசையின் மூலம் தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி ஆசிய கண்டத்திற்கே மிகப்பெரிய பெருமையை தேடித் தந்துள்ளார்” என புகழாரம் சூட்டியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!