முதல்வருக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல மனசில்லையா? நயினார் நாகேந்திரன் காட்டம்!

 
நயினார் ஸ்டாலின்

இன்று உலகம் முழுவதும் சித்திரை 1 தமிழ் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய நாளை ஒரு தரப்பினர்  தமிழ் புத்தாண்டு தினமாகவும், ஒரு தரப்பினர் சித்திரை திருநாளாகவும்  கொண்டாடி வருகின்றனர். இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை.  அவர் எதற்காக வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை என  அரசியல் வட்டாரத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளது.

அந்த வகையில், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இது குறித்து முதல்வருக்கு கேள்வி எழுப்பி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் ” ஒட்டுமொத்த உலகமும் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், தமிழ் மொழியின் காவலன் நான் என வீராப்பு காட்டும் அய்யா ஸ்டாலின் அவர்கள் நண்பகல் கடந்தும் நமது தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறாமல் அவர்களைப் புறக்கணித்து வருகிறார்.

இந்த ஆண்டும் தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனத்தின் “ஆவின் பால் பாக்கெட்டுகளில் புத்தாண்டு வாழ்த்துகள் பதிவிடப்படவில்லை. ஆங்கிலப் புத்தாண்டிற்கு அகிலத்திற்கெல்லாம் வாழ்த்துமடல் எழுதும் முதல்வருக்கு. ஆண்டாண்டு காலமாகத் தமிழர்களின் கலாச்சாரக் கொண்டாட்டமான தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்துக் கூற மனமில்லையா?

நயினார் நாகேந்திரன்

“தமிழுக்காக உயிரைக் கொடுக்கும் கழகம் திமுக” என விளம்பர வசனம் பேசிக் கொண்டு நமது தாய்த் தமிழை வெறும் அரசியல் பிழைப்பு மொழியாக மட்டுமே திமுக பயன்படுத்துகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

தொடர்ந்து தமிழர்களின் மத-கலாச்சார நம்பிக்கைகளின் மீது சேற்றை வாரி இறைக்கும் திமுக-விற்கு வாக்குச்சாவடிகளில் சவுக்கடி கிடைக்கப் போவது நிச்சயம்” என காட்டத்துடன் பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web