18 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பஸ் !
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், எரிபொருள் செலவை தடுக்கவும் ஒருகாலத்தில் ஓடிய டபுள் டக்கர் பஸ் மீண்டும் சாலைகளில் ஓடப் போகிறது. 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அறிமுகமாகும் இந்த சேவை, சுற்றுலா பயணிகளுக்கு புதிய அனுபவமாக இருக்கும். முதற்கட்டமாக அடையாறு–மாமல்லபுரம் வழியில் இந்த பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது.
சிகப்பு நிற டபுள் டக்கர் பஸ் சோதனை ஓட்டம் அடையாறில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் வரை நடத்தப்பட்டது. குறிப்பாக உத்தண்டி டோல் கேட்டை கடக்கும் போது, பஸ் மேற்கூரைக்கு உரசுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஒரு அடி தூரம் இடைவெளி இருந்ததால் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது. முழுக்க ஏசி வசதி கொண்ட இந்த பஸ் மாமல்லபுரம் நிலையத்துக்கு வந்ததும் சுற்றுலா பயணிகள் உள்ளே சென்று பார்த்து மகிழ்ந்தனர்.

சாதாரண மின்சார பஸ்களில் 60 பேர் மட்டுமே பயணம் செய்ய முடிகிறது. ஆனால் புதிய டபுள் டக்கர் பஸ்களில் 90 பயணிகள் வரை அமர முடியும். மின்சார சார்ஜில் இயங்கும் இந்த பஸ்கள் டீசல் செலவை குறைத்து சுற்றுச்சூழலுக்கும் நன்மை செய்யும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விடுமுறை நாட்களில் கூடுதலாக இவை இயக்கப்பட வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ChatGPT can make mistakes. Che
