நாளை விஜய் பிறந்தநாளில் டபுள் ட்ரீட்... ‘ஜனநாயகன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது!

நாளை விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கிறது. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, நாளை ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட உள்ளது.
A lion is always a lion
— KVN Productions (@KvnProductions) June 20, 2025
& his first roar is incoming 🔥
June 22 | 12.00 AM#JanaNayaganTheFirstRoar #JanaNayagan#Thalapathy @actorvijay sir #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @Jagadishbliss… pic.twitter.com/a0PZ67R4MF
நடிகர் விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் 2026 ஜனவரி 9ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், 'ஜனநாயகன்' படத்திற்கு பின், முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாக விஜய் அறிவித்துள்ளார்.
இதனால் இது விஜய்யின் கடைசி படமாக பார்க்கப்படுவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். படத்தின் வியாபாரமும் களைக்கட்டி வருகிறது.
வில்லனாக பாபி டியோல் நடிக்கிறார். இவர்களுடன் சேர்ந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நரேன், மமிதா பைஜு, பிரியாமணி உட்பட பல நட்சத்திரப்பட்டாளங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 'ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் விஜய் பிறந்தநாளை ஒட்டி நாளை ஜூன் 22ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது,
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!