வரதட்சிணை கொடுமை... 10 பவுன் நகை கேட்டு மனைவியை கிணற்றில் தள்ளி கொலை செய்த கணவன்!

 
nellai

நெல்லை மாவட்டம் மானூர் குப்பண்ணாபுரத்தைச் சேர்ந்த அந்தோணி (25) ராமையன்பட்டி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். அவருக்கும் மேல இலந்தைகுளத்தைச் சேர்ந்த பாக்கியத்தாய் (23) என்பவருக்கும் 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சமீப நாட்களாக மனைவியிடம் 10 பவுன் நகை அல்லது 10 லட்சம் ரூபாய் வாங்கி வருமாறு கணவன் தொந்தரவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கிணறு

இந்த நிலையில் நேற்று இரவு கணவன்-மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சமாதானமாக பேசுவது போல நடித்த அந்தோணி, மனைவியை வீட்டருகே உள்ள சொந்த கிணற்றுக்கு குளிக்க அழைத்துச் சென்றார். அங்கு சென்றதும் பாக்கியத்தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை கிணற்றில் தள்ளினார். இன்று காலை எதுவும் தெரியாதது போல மனைவி காணவில்லை என தாயிடம் கூறி, சுற்றுவட்டார பகுதிகளில் தேடியுள்ளார்.

ஆம்புலன்ஸ்

இதையடுத்து மானூர் காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்தோணியை விசாரித்தபோது அவர் முரணான தகவல்களை கூறினார். சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில், மனைவியை கொலை செய்து கிணற்றில் வீசியதை அவர் ஒப்புக்கொண்டார். உடனே அந்தோணியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!