5 ஆண்டு உருகி உருகிக் காதல்... கல்யாணமாகி 40 நாட்களில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை... வரதட்சணை கொடுமையால் சோகம்!
காதல் திருமணங்கள் கசந்து போவதற்கு வரதட்சணை எனும் அரக்கன் இன்னும் ஒரு காரணமாக இருப்பது ஹைதராபாத்தில் நடந்த இந்தத் துயரச் சம்பவத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பீகாரைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் இஷிதா யாதவும், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது நீரஜ் பன்சாலும் கடந்த 5 ஆண்டுகளாக ஒருவரையொருவர் உயிருக்குயிராகக் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்குப் பச்சைக்கொடி காட்டிய இருவீட்டுப் பெரியவர்களும், கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி கோலாகலமாகத் திருமணம் செய்து வைத்தனர்.

ஆனால், மணமேடையில் காட்டிய அந்த அன்பு, இல்லற வாழ்க்கையில் நீடிக்கவில்லை. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே "கூடுதல் வரதட்சணை வேண்டும்" என்று கணவர் நீரஜ் பன்சால் தனது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கியுள்ளார். காதல் கணவனே இப்படி டார்ச்சர் செய்கிறானே என்று மனமுடைந்த இஷிதா, பலமுறை சமரசம் செய்ய முயன்றும் பலனில்லை. கணவனின் சித்ரவதை எல்லை மீறியதால், வேறு வழியின்றி தனது இன்னுயிரைத் தூக்கிட்டு மாய்த்துக் கொண்டுள்ளார் அந்தப் பெண்.

திருமணமாகி வெறும் 40 நாட்களிலேயே ஒரு இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது ஹைதராபாத் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "காதலிக்கும்போது தெரியாத வரதட்சணை, கல்யாணமானதும் எங்கே இருந்து வந்தது?" என்று இஷிதாவின் உறவினர்கள் கண்ணீர் மல்கக் கேள்வி எழுப்புகின்றனர். தற்போது இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள கணவர் நீரஜ் பன்சாலைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
