முனைவா் யசோதா நல்லாளுக்கு தூய தமிழ் பற்றாளா் விருது வழங்கி கெளரவிப்பு!
Apr 2, 2025, 05:15 IST
முனைவர் வ.சு.யசோதா நல்லாளுக்கு தூய தமிழ் பற்றாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், வடக்குப் புதுப்பாளையத்தில் வசித்து வந்தவர் வ.கோ.சுப்பிரமணியம். இவரது மகள் 37 வயது வ.சு.யசோதா நல்லாள். இவர் கோவை பேரூா் தமிழ் கல்லூரியில் தமிழ் பயின்ற இளம் எழுத்தாளர்.
‘சங்க இலக்கியத்தில் கண்கள்’ எனும் தலைப்பில் முனைவா் பட்ட ஆய்வும், கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை ஆய்வில் (அமெரிக்க தமிழ்ப் பல்கலைக்கழகம்) கௌரவ முனைவா் பட்டமும் பெற்றவா். இத்துடன் பன்னிரு திருமுறைகளான தேவாரம் மற்றும் திருவாசகம் முதலியவற்றை முறையாகப் படித்தவர். இவர் சமீபத்தில் எழுதிய 'வீரசைவ மரபு' எனும் நூல் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் ஆய்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தமிழுக்குத் தொண்டாற்றி வரும் இவருக்கு தமிழக அரசு சாா்பில், 2024ம் ஆண்டுக்கான தூய தமிழ் பற்றாளா் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.


