தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு .... லட்சக் கணக்கில் வாக்காளர்கள் நீக்கம்...
தமிழகம் முழுவதும் வெளியான வரைவு வாக்காளர் பட்டியல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குப் பிறகு வெளியான பட்டியலில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் மட்டும் 14.25 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருப்பூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இறப்பு, முகவரியில் இல்லாமை, நிரந்தர குடிபெயர்வு, இரட்டை பதிவு போன்ற காரணங்களால் இந்த நீக்கங்கள் செய்யப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழகத்தின் மிகப்பெரிய தொகுதியான சோழிங்கநல்லூரில் மட்டும் 2.18 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, பெயர் இடம்பெறாதவர்கள் கவலைப்பட வேண்டாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உரிய படிவங்கள் மூலம் ஆட்சேபனை தெரிவித்து பெயரை மீண்டும் சேர்க்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்வளவு பெரிய அளவிலான நீக்கம் அரசியல் கட்சிகள் மத்தியில் கேள்விகளை எழுப்பி உள்ளது. வாக்காளர் பட்டியல் விவகாரம் வரும் தேர்தல்களில் முக்கிய பேசுபொருளாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் மிகப்பெரிய தொகுதியான சோழிங்கநல்லூரில் 2,18,444 பேர் நீக்கம்
கோவையில் எஸ்ஐஆர் நடவடிக்கையில் 6.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
தருமபுரி மாவட்டத்தில் 81,515 பேர்
கரூர் மாவட்டத்தில் 79,690 வாக்காளர்கள் நீக்கம்
திருச்சி மாவட்டத்தில் 3,31,787 வாக்காளர்கள் நீக்கம்
திண்டுக்கல் மாவட்டத்தில் 3,24,894 வாக்காளர்கள் நீக்கம்
சேலம் மாவட்டத்தில் 3,62,429 வாக்காளர்கள்
நாமக்கல் மாவட்டத்தில் 1,93,706 வாக்காளர்கள் நீக்கம்
விழுப்புரம் மாவட்டத்தில் 17,27,490 பேர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,74,549 பேர் நீக்கம்.
ராணிப்பேட்டையில் 1,45,157 வாக்காளர்கள் நீக்கம்.
நாகப்பட்டினத்தில் 57,338 வாக்காளர்கள் நீக்கம்
செங்கல்பட்டில் 7,01,871 வாக்காளர்கள் நீக்கம்
திருப்பூரில் 5,63,785 வாக்காளர்கள் நீக்கம்
திருவண்ணாமலையில் 2,51,162 வாக்காளர்கள் நீக்கம்.
கள்ளக்குறிச்சியில் 84,329 வாக்காளர்கள் நீக்கம்
மதுரையில் 3,80,474 வாக்காளர்கள் நீக்கம்.
காஞ்சிபுரத்தில் 2,74,274 வாக்காளர்கள்
அரியலூரில் 24,368 வாக்காளர்கள் நீக்கம்
கடலூரில் 2,46,818 வாக்காளர்கள் நீக்கம்.
புதுக்கோட்டையில் 1,39,587 வாக்காளர்கள் நீக்கம்.
ஈரோடு மாவட்டத்தில் 3,25,429 வாக்காளர்கள்
கன்னியாகுமரியில் 1,53,373 வாக்காளர்கள்
சிவகங்கையில் 1,50,828 வாக்காளர்கள்
தூத்துக்குடியில் 1,62,527 பேர் நீக்கம்
தென்காசியில் 1,51,902 வாக்காளர்கள்
தேனி மாவட்டத்தில் 1,25,729 பேர்
தஞ்சாவூரில் 2,06,000 பேர்
விருதுநகரில் 1,89,000 வாக்காளர்கள் நீக்கம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
திருநெல்வேலியில் 2,16,966 பேர் நீக்கம்.
