பெருமிதம்... இந்திய தயாரிப்பு ஹெலிகாப்டரில் பறந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு !
இந்திய - பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள ஜெய்சால்மர் விமானப்படைத் தளத்தில், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டரான LCH Prachand-ல் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று பயணம் மேற்கொண்டார். குரூப் கேப்டன் நயான் சாந்திலால் பஹுவாவுடன் சுமார் 25 நிமிடங்கள் அவர் பறந்தார். இந்தப் பயணம் பாதுகாப்பு திறனில் நாட்டின் முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
பயணத்தின் போது காடிசர் ஏரி மற்றும் ஜெய்சால்மர் கோட்டை மீது ஹெலிகாப்டர் பறந்தது. இலக்கை நோக்கி தாக்குதல் திறன் காட்சிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படைத் தளபதி ஏ.பி.சிங் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றொரு ஹெலிகாப்டரில் இணைந்தனர்.

பயணத்திற்குப் பிறகு பார்வையாளர் புத்தகத்தில் பதிவுசெய்த குடியரசுத் தலைவர், ‘பிரசாந்த்’ ஹெலிகாப்டர் தன்னம்பிக்கையின் சின்னம் என்றும், இது தற்சார்பு பாரதத்தின் சக்திவாய்ந்த அடையாளம் என்றும் குறிப்பிட்டார். இந்த அனுபவம் நாட்டின் பாதுகாப்புத் திறனில் பெருமையை அதிகரித்ததாகவும், ஏற்பாடுகளை செய்த இந்திய விமானப்படைக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
