தினமும் குடித்து விட்டு டார்ச்சர்.. 12 வயது மகனின் உதவியுடன் கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி!

 
கொலை

தென்காசி மாவட்டம் சேந்தமரம் அருகே உள்ள நொச்சிகுளம் கிராமத்தில் வசித்து வருபவர் மரியா ஆரோக்கிய செல்வி (30). தனது கணவர் முத்துக்குமார் மஞ்சள் காமாலை காரணமாக மயக்கமடைந்துவிட்டதாக கடந்த 5 ஆம் தேதி 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக அங்கு ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. முத்துக்குமாரை ஆம்புலன்ஸ் செவிலியர் பரிசோதித்தார். அப்போது, ​​அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினார்.

கொலை

அவரது மரணத்தில் சந்தேகம் இருந்ததால், சேந்தமரம் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்த மரிய ஆரோக்கிய செல்வி, தனது கணவர் முத்துக்குமார் வேலைக்குச் செல்லவில்லை என்றும், தினமும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்ததாகவும், அதனால் தனது 12 வயது மகனின் உதவியுடன் தனது கணவரை கழுத்தை நெரித்து கொன்று, நாடகமாடியதாக அவர் வாக்குமூலம் அளித்தார்.

இதனிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில் முத்துக்குமார் கழுத்தை நெரித்து இறந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சேந்தமரம் போலீசார் மரிய ஆரோக்கிய செல்வி மற்றும் அவரது மகனை கைது செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web