கழிவுநீர் கலந்த குடிநீர் … மேலும் 20 பேர் பாதிப்பு, பலி எண்ணிக்கையில் நீடிக்கும் குழப்பம்!

 
இந்தூர்

 

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பகீரத்புரா பகுதியில் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் புதிதாக மேலும் 20 பேர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 398 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட நிலையில், 256 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

142 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 11 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். அரசு தரப்பில் 6 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டாலும், மேயர் 10 பேர் என்றும், பொதுமக்கள் 16 பேர் என்றும் கூறுவதால் பலி எண்ணிக்கையில் குழப்பம் நீடிக்கிறது. கடந்த 8 மாதங்களாகவே அசுத்தமான குடிநீர் குறித்து மக்கள் புகார் கூறி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம்புலன்ஸ்

இந்த விவகாரம் அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது. செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் விஜய்வர்க்கியா பேசிய விதம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, குடிநீர் தொற்றை ஆய்வு செய்ய தேசிய பாக்டீரியா ஆராய்ச்சி குழு இந்தூருக்கு வந்துள்ளது. நோய்ப்பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளதாக அதிகாரிகள் கூறினாலும், மக்கள் மத்தியில் அச்சம் நீங்கவில்லை.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!