நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்... குடிநீர் வாரியம் அறிவிப்பு!

 
குடிநீர் விநியோகம் ரத்து

வளசரவாக்கம் மண்டலத்தில் போரூர் ஆற்காடு சாலை, சிஎம்ஆர்எல் தூண் எண் 246 அருகே உள்ள குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவை சரிசெய்யும் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை காலை 6 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை சென்னை மாநகரின் பல பகுதிகளில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

குடிநீர்

மண்டலம்-9 தேனாம்பேட்டை, மயிலாப்பூர், நந்தனம், மண்டலம்-10 கோடம்பாக்கம், கே.கே.நகர், அசோக் நகர், மேற்கு மாம்பலம், மண்டலம்-11 வளசரவாக்கம், ஆலப்பாக்கம், ராமாபுரம், மண்டலம்-12 ஆலந்தூர், முகலிவாக்கம், மணப்பாக்கம் மற்றும் மண்டலம்-13 அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்கும்.

பெங்களூருவில் குடிநீர்

இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற https://cmwssb.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம். குடிநீர் இணைப்பு இல்லாத மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் வழக்கம்போல் தடையின்றி நடைபெறும் என்றும் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!