குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் ... உயர்நீதிமன்றம் எச்சரிக்கை உத்தரவு!
மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில் குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் குடிநீர் பாட்டில்களில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற சிறப்பு அமர்வில் நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி, மத்திய சுகாதார துறை சார்பில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையை பரிசீலித்தனர். அதில், பிளாஸ்டிக் நுண்துகள்களின் பாதிப்பை ஆய்வு செய்ய லக்னோ, கொச்சி, பிலானி ஆகிய இடங்களில் ஆராய்ச்சி நடத்தப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஹிமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் ஆய்வு செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது உறுதி செய்யப்பட்டு, பிளாஸ்டிக் பாக்கெட்களில் விற்கப்படும் உப்பு, சர்க்கரையிலும் இதே பிரச்சனை இருக்கின்றது என மத்திய அரசு தெரிவித்தது. நீதிமன்றம் அவற்றில் எச்சரிக்கை வாசகங்கள் இடப்படவேண்டும் என்று உத்தரவிட்டது. ஆய்வுகள் முடியும் வரை மக்களில் குழப்பம் ஏற்படாமல், ஆய்வுகளை விரைந்து முடிக்கவும் கேட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
