செம மாஸ்... இன்று சென்னையில் ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில்... 2வது கட்ட சோதனை ஓட்டம்!

 
மெட்ரோ
 


 
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்று ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் 2ம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இன்று ஏப்ரல் 28ம் தேதி  மாலை 3 முதல் 6 மணி வரை ஓட்டுனரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இந்த ஓட்டம் பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9 கி.மீ. தொலைவுக்கு இந்த சோதனை ஓட்டம் நடக்கவுள்ளது. 

மெட்ரோ

ஏற்கனவே மார்ச் 20ம் தேதி 2.5 கி.மீ. தூரத்திற்கு 25 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் இன்று மீண்டும் சோதனை ஓட்டம் நடக்கிறது.சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.

மெட்ரோ
 
இதில் முக்கிய வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவா் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பாலப் பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.இதில், பூந்தமல்லி - போரூர் இடையே பல இடங்களில் ரயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.இதையடுத்து இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டுக்கு டிசம்பா் மாத இறுதிக்குள் கொண்டுவர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web