செம...!! சென்னையில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள்!!

 
மெட்ரோ ரயில்

சென்னையின் முக்கிய பகுதிகள் அனைத்தும் மெட்ரோவால் இணைக்கப்பட்டு வருகின்றன.  மெட்ரோ ரயில் சேவை கோயம்பேடு முதல் பரங்கிமலை வரையிலும், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலும் இரு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் காலியாக சென்ற ரயில்கள் தற்போது நிரம்பி வழிகின்றன. பெட்ரோல் விலை உயர்வு, குறைவான நேரத்தில் அதிக தொலைவு பயணம்  காரணமாக நாளுக்கு நாள் சென்னையில் மெட்ரோவின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

மெட்ரோ ரயில்

பல பகுதிகளில்  2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்ட மெட்ரோ பாதையானது மாதவரம் முதல் சிறுசேரி வரையிலும் ,  மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும், பூந்தமல்லி முதல் விவேகானந்தர் இல்லம் வரையிலும் என 3 வழித்தடங்களில்  மொத்தம் 118 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மெட்ரோ ரயில்

இந்த 2ம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடங்களில்   ஓட்டுநர் இல்லா ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  தற்போது இதற்கான பணிகளை  மெட்ரோ நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக முதலில் 138 ஓட்டுநர் இல்லா ரயில்கள் வாங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ள   நிலையில்,  முதலில் 70 ரயில்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.   இவை அனைத்தும்  2026ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web