ஓட்டுனர்களே உஷார் ... ஏர்ஹாரன் பேருந்துகளுக்கு ரூ10000 வரை அபராதம்!

 
ஏர்ஹாரன் பேருந்து

தமிழகத்தில் பேருந்துகள் இருசக்கர வாகனங்களில் ஏர்ஹாரன்கள் ஒலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாநகர மற்றும் புறநகர பகுதிகளில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹார்ன் பொருத்தப்பட்டு இருப்பதாக புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி ஆக்‌ஷனில் இறங்கினர். 

ஏர்ஹாரன் பேருந்து

அதன்படி சாலையில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று அதிக ஒலியுடன் பேருந்துகள் அருகே வருவது பிற வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலையும், ஆபத்தையும் ஏற்படுத்தி வருவதால் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். 

அந்த ஆய்வில் ஒலியின் அளவை அளக்கக்கூடிய கருவியில் 90 டெசிபல்-க்கு அதிகமாக ஒலி எழுப்பும் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் பேருந்துகளில் பொருத்தப்பட்ட ஏர் ஹாரனை அகற்றினர். தனியார் பேருந்துகளுடன் அரசு பேருந்துகளும் பாரபட்சம் இன்றி சோதனை செய்யப்பட்டன.

ஆம்னி பேருந்து

வாகனங்களில் ஏர் ஹார்ன் தொடர்ந்து பயன்படுத்தபட்டு வருவதாக எழுந்த புகார்களின் அடிப்படையிலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்,காவல்துறை அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஏர் ஹாரன் பொருத்திய வாகனங்கள் குறித்து ஆய்வு செய்தனர். இந்த பேருந்துகளில் ஒலி எழுப்பான்களில் டெசிபல் அதிகமாக இருந்த காரணத்தினால் அபராதம் விதிக்கப்பட்டது என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த அபராத தொகையானது ரூ.3000 முதல் ரூ. 10,000 வரை இருக்கலாம் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?