திருமண நிகழ்வில் ட்ரோன் தாக்குதல்... 30 பேர் உடல் சிதறி பலி!
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி முதல் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாகப் பயங்கரமான உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. ராணுவ தளபதி ஜெனரல் படக் அல்-பர்ஹன் தலைமையிலான படைகளுக்கும், துணை ராணுவப் படையினருக்கும் இடையே நடக்கும் இந்த மோதலில் இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் பலியாகியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் தலைநகர் கார்டூமை ராணுவம் கைப்பற்றிய போதிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் ரத்த ஆறு ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

இந்தச் சூழலில், சூடானின் டர்பர் மாகாணம் குடும் நகரில் நேற்று ஒரு வீட்டில் திருமண நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. உறவினர்களும் நண்பர்களும் மகிழ்ச்சியாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, சற்றும் எதிர்பாராத விதமாக வானில் இருந்து வந்த டிரோன்கள் அந்த வீட்டின் மீது குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தின. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இடமே புகைமண்டலமாகக் காட்சியளித்ததுடன், மகிழ்ச்சியில் திளைத்திருந்த திருமண வீடானது ரத்தக் கறைகளுடன் சுடுகாடு போல மாறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூர டிரோன் தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட மொத்தம் 30 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் போராடி வருகின்றனர். இந்தத் தாக்குதலை அந்நாட்டு ராணுவமே நடத்தியதாகப் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், திருமணக் கொண்டாட்டத்தில் புகுந்து 30 உயிர்களைப் பறித்த இந்தச் சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் எழுப்பியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
