ட்ரோன் தாக்குதலால் 8 குழந்தைகள் உட்பட 24 பேர் பலி!
வட ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர். இதில் 8 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு கோர்டோஃபான் மாகாணத்தில் உள்ள ரஹாத் நகரில் இந்த தாக்குதல் நடைபெற்றது.
மத்திய சூடானில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது துணை ராணுவத்தினர் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் வாகனம் முற்றிலும் சேதமடைந்தது. பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே 2023 முதல் கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இந்த மோதலால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடக்கும் தாக்குதல்கள் பொதுமக்களின் உயிருக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
