புதின் வீடு மீது ட்ரோன் தாக்குதல்? வீடியோ வெளியிட்டு ரஷியா பரபரப்பு குற்றச்சாட்டு!
ரஷியா–உக்ரைன் இடையே தொடங்கிய போர் மூன்று ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தப் போரால் இரு நாடுகளிலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், ஜனாதிபதி டிரம்ப் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார். ஆனால் இதுவரை போர் நிறுத்த உடன்பாடு எட்டப்படவில்லை.
❗️First Footage Of Downed Drone Used In Attack Against President Putin's Residence
— RT_India (@RT_India_news) December 31, 2025
The vehicle carried a 6-kilogram explosive charge.
📹: 🇷🇺 MoD pic.twitter.com/zrAavAxMyP
இந்த நிலையில், ரஷிய அதிபர் புதினின் நவ்கரோட் பகுதியில் உள்ள வீட்டை குறிவைத்து உக்ரைன் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதாக ரஷியா திடீரென குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், 6 கிலோ வெடிபொருட்களுடன் வந்த ‘சக்லன்-வி’ ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதன் சிதைந்த பாகங்கள் தரையில் கிடப்பதாகவும் காணப்படுகிறது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை உக்ரைன் அரசு மறுத்துள்ளது. இதற்கு முன்பே, நவ்கரோட் வடக்கு பகுதியில் உள்ள புதினின் வீட்டை தாக்க 20-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை உக்ரைன் பயன்படுத்த முயன்றதாக ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரவ் தெரிவித்திருந்தார். தற்போது வெளியிடப்பட்ட வீடியோ இந்த விவகாரத்தில் சர்வதேச அளவில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
