போதை ஆசாமிகள் அட்டூழியம்… கல்லூரி பேருந்தை தாக்கியதால் அலறிய மாணவிகள்!

 
போதை போதை

மதுரை அருகே மாணவிகள் சென்ற கல்லூரி பேருந்தை சிலர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் பயணித்த பேருந்து கிராமப்புற சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தின் அருகே பேருந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு இருந்த சிலர் ஆத்திரமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது போதை நிலையில் இருந்த சிலர் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும் கதவை உடைத்து பேருந்துக்குள் புகுந்த ஒருவர் ஓட்டுநரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட மாணவிகள் பயந்து அலறியதாகவும் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை பேருந்தில் இருந்த மாணவி ஒருவர் காணொலியாக பதிவு செய்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த காட்சிகள் வெளியான நிலையில் காவல்துறையினர் விசாரணை தொடங்கியுள்ளனர். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!