போதைப்பொருள் வழக்கு ரத்து... நடிகை ஹேமா அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிப்பு!

 
நடிகை ஹேமா

கடந்த ஆண்டு (2024) பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் நடந்த போதை விருந்தில் கலந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த பிரபல நடிகை ஹேமா மீதான வழக்கை, கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்து அவரை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்துள்ளது.

‘லிவிங் டுகெதர்’ ஜோடிகளுக்கு இந்த உரிமை கிடையாது!! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!!

பெங்களூரு ஹெப்பகோடியில் உள்ள ஜி.ஆர். ஃபார்ம் என்ற பண்ணை வீட்டில் கடந்த மே மாதம் போதை விருந்து நடைபெற்றது. இதில் நடிகை ஹேமா உட்பட 88 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் எம்.டி.எம்.ஏ. மற்றும் கொகைன் உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்தியதாகப் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

போதை பொருள் வைத்திருப்பவர்களை சிறையில் அடைக்கக் கூடாது! அதிரடி அறிவிப்பு!

நடிகை ஹேமா தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி முகமது நவாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அவர் நடிகை ஹேமா மீதான வழக்கை ரத்து செய்து, அவர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுவித்து உத்தரவு பிறப்பித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!