போதைப்பொருள் வினியோகம்... மருத்துவ மாணவி உட்பட 7 பேர் கைது - சினிமா பாணி என்கவுன்ட்டர் முயற்சி!

 
போதைப்பொருள்

கேரளாவில் மாணவர்களையும் இளைஞர்களையும் குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்து வந்த ஒரு பெரிய கும்பலை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்துள்ளனர். இந்தச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான அசிம் என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு நெய்யார் அணை அருகே உள்ள சோதனைச் சாவடியில் போலீசாரின் ஜீப் மீது தனது காரை மோதிவிட்டுத் தப்பிச் சென்றார். அப்போதிலிருந்து அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

அசிமின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்த போலீசார், அவர் கனியாபுரம் தோப்பில் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதை உறுதி செய்தனர். நேற்று அந்த வீட்டைச் சுற்றி வளைத்த போலீசார், அதிரடியாக உள்ளே நுழைந்து அங்கிருந்தவர்களைக் கைது செய்தனர். இந்தச் சோதனையில் அசிம் மட்டுமின்றி, போதைப்பொருள் விற்பனையில் தொடர்புடைய மற்ற 6 பேரும் பிடிபட்டனர். 

போதைப்பொருள்

போதைப்பொருள் விற்பனையின் முக்கிய குற்றவாளிகளான அசிம் & அஜித், கொட்டாரக்கரையைச் சேர்ந்த பி.டி.எஸ் (பல் மருத்துவம்) மாணவி ஹலினா (27), கிழக்கு கோட்டாவைச் சேர்ந்த மருத்துவர் விக்னேஷ் தத்தன் (34), கொல்லத்தைச் சேர்ந்த ஐ.டி (IT) ஊழியர் அவினாஷ் (27), போதைப்பொருள்  விநியோகஸ்தர்கள் அன்சியா (37) & ஹரிஷ் (29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எம்.டி.எம்.ஏ (MDMA) போதைப்பொருள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள், 10 செல்போன்கள் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.

போதைப்பொருள்

கேரளாவில் படித்த இளைஞர்கள் மற்றும் மருத்துவத் துறையைச் சார்ந்தவர்கள் இது போன்ற போதைப்பொருள் கும்பலில் சிக்கியுள்ளது காவல் துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!