போதைப் பொருள் விற்பனை... அமெரிக்காவில் 200க்கும் மேற்பட்ட இணையதளங்கள் முடக்கம்!

 
டிரக்
 

இந்தியாவை தளமாக கொண்டு ஆன்லைன் பார்மசி என்ற பெயரில் போதைப் பொருட்கள் விற்பனை செய்த சர்வதேச குற்றக் குழுவுடன் தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட இணையதளங்களை அமெரிக்க அதிகாரிகள் முடக்கியுள்ளனர். பல இணையதளங்களில் மருந்துகள் மற்றும் போதைப் பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுகுறித்து அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த 2022-ம் ஆண்டு முதல் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலம் மருந்துகள் மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதில் இதுவரை 3 பேர் உயிரிழந்ததும், 6 பேர் அதிக அளவில் மருந்து எடுத்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்தியாவை தளமாக கொண்டு செயல்படும் இந்த சர்வதேச குற்றக் குழு குறித்து இந்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த கும்பலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக ஆன்லைன் பார்மசி நடத்தும் விநியோகஸ்தர்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!