திரைத்துறையில் போதைப்பொருள் பயன்பாடு பலகாலமாக இருந்து வருகிறது... விஜய் ஆண்டனி அதிர்ச்சி தகவல்!

இந்தப்படத்தில் விஜய் ஆண்டனி சகோதரியின் மகன் அஜய் திஷன் வில்லனாக நடித்திருக்கிறார். நடிகை பிரிகிடா, சமுத்திரக்கனி உட்பட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘மார்கன்’ படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இத்திரைப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ப்ரித்திகா, விஜய் ஆண்டனி சகோதரியின் மகன் அஜய் திஷன் உட்பட படக்குழுவினர் மதுரை சொக்கிகுளம் பகுதியில் உள்ள தனியார் மாலில் அமைந்துள்ள திரையரங்கில், படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
செய்தியாளர்கள் அவரிடம் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு , “சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்றல்ல. பல நாட்களாகவே போதைப்பொருள் பயன்பாடு உள்ளது. இந்தக் கூட்டத்தில் கூட யாராவது இருக்கலாம். காவல்துறை விசாரணை நடைபெறுகிறது. அதைப்பற்றி சொல்ல ஒன்றுமில்லை” எனக் கூறியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!