லாரியில் கடத்தி வந்த ரூ.26 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!

 
போதை லாரி கடத்தல்

மியான்மர், வங்காளதேசம் போன்ற வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் போதைப்பொருள் கடத்தி வரப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அசாம் போலீசார் அதிரடிச் சோதனை நடத்தி, ரூ. 26 கோடி மதிப்புள்ளப் போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

போதை

மிசோரம் மாநிலத்தில் இருந்து அசாம் மாநிலத்திற்குக் கள்ளத்தனமாக லாரியில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக நேற்று அசாம் போலீசாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், அசாமின் கசார் மாவட்டம் ரொங்க்பூர் பகுதியில் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு லாரியை மறித்துச் சோதனை நடத்தியதில், போலீசார் பெருமளவு போதைப்பொருளையும், 90 ஆயிரம் போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.

போதை பொருள் வைத்திருப்பவர்களை சிறையில் அடைக்கக் கூடாது! அதிரடி அறிவிப்பு!

பறிமுதல் செய்யப்பட்ட இந்த போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளின் மொத்தச் சந்தை மதிப்பு சுமார் ரூ. 26 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டக் கசார் மாவட்டத்தைச் சேர்ந்த தலிம் உதின் லஷ்கர் மற்றும் அபெத் சுல்தான் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போதைப்பொருளின் மூலப்பொருள் எங்கிருந்து பெறப்பட்டது, இதன் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!