அடுத்த ஷாக்...பாரசிட்டமால் முதல் பிபி மாத்திரை வரை... 15 நாளில் 300% உயர்வு... !

 
மருந்து, மாத்திரைகள் மருந்து, மாத்திரைகள்


மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம், இப்போது இந்தியர்களின் மருந்துப் பெட்டிகளையும் பதம்பார்க்கத் தொடங்கியுள்ளது. போரின் எதிரொலியால் சர்வதேச அளவில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருந்து தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களின் (API) விலை வெறும் 15 நாட்களில் 200% முதல் 300% வரை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் மருந்துத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சுமார் 500 மருந்து உற்பத்தி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 'இமாச்சல மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம்' இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகத்திடம் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. இதில் பெரும்பாலானவை குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) நிறுவனங்கள் என்பதால், இந்தத் திடீர் விலை உயர்வால் உற்பத்தியைத் தொடர முடியாமல் அவை திணறி வருகின்றன.

 மாத்திரை
இந்திய வீடுகளில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் பாரசிட்டமால் மாத்திரையின் மூலப்பொருள் விலை, கடந்த இரண்டு வாரங்களில் ஒரு கிலோ ரூ.250-லிருந்து ரூ.450-ஆக எகிறியுள்ளது. இதுமட்டுமின்றி, மருந்து கரைப்பான்கள் (Solvents), பேக்கேஜிங் பொருட்கள் என அனைத்தின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!